யோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு

சினிமா
Updated Jun 18, 2019 | 18:30 IST | Zoom

யோகி பாபு நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கித்தில் உருவாகியுள்ள 'கூர்கா' படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது.

Gurkha
கூர்கா  |  Photo Credit: Twitter

'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மனோபாலா, சார்லி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கூர்கா'. இந்த படத்தின் இசை இன்று வெளியானது.

புதுமுக இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் இந்த படத்திற்கு பாடல் எழுதி உள்ளனர். 'கனா' படத்தின் இயக்குநரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் 'ஜிகர்தண்டா' படத்திற்கு பிறகு வாய்ப்புகாக காத்திருந்தபோது இயக்குநர் சாம் ஆண்டன் தன் மேல் நம்பிக்கை வைத்து தனக்கு 'டார்லிங்' படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு தந்ததாக இசை வெளியிட்டு விழாவில் அவர் கூறினார்.

இந்நிலையில் கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சித்தார்த், கரு.பழனியப்பன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட பல நட்சத்திரங்கள் ங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய நடிகர் சித்தார்த், யோகி பாபு வெறும் நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல. அவர் மிக சிறந்த நடிகர் என கூறினார். மேலும், யோகி பாபுவிடம் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

ஏப்ரல் மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் இடையே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய் நடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

NEXT STORY
யோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு Description: யோகி பாபு நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கித்தில் உருவாகியுள்ள 'கூர்கா' படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது.
Loading...
Loading...
Loading...