பிக்பாஸ் சீசன் 3: நாமினேஷன் முடிஞ்சுது... வனிதாவை வெளியே அனுப்புவாரா பிக்பாஸ்?!

சினிமா
Updated Jul 09, 2019 | 14:35 IST | Zoom

பிக்பாஸ் சீசன் 3-ல் இரண்டாவது வாரம் நாமினேஷன் ப்ராஸஸ் முடிந்து ஒரு வழியாக எல்லோரும் எதிர்பார்த்த வனிதா நாமினேட் ஆகிவிட்டார். வனிதாவை வெளியே அனுப்புவாரா பிக்பாஸ்?!

Bigg Boss Vanitha
பிக்பாஸ் வனிதா   |  Photo Credit: Twitter

பிக்பாஸ் வீட்டில் முதல் வார கேப்டனாக இருந்தால் எலிமினேஷன் ப்ராசஸுக்கு நாமினேட் ஆகாத வனிதா விஜயகுமார் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார்.      

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய நாள் முதல் மிகவும் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. சண்டை, அழுகை, ரொமான்ஸ் என்று எந்த அம்சத்திற்கும் குறைவில்லை. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால், சென்ற வாரம் நாமினேட் ஆனவர்களில் குறைந்த வாக்குகளை பெற்றதால் வீட்டை விட்டு முதல் நபராக ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் தர்ஷன் விட்டுக்கொடுத்ததால் அபிராமி இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அபிராமி மீது அதிருப்தி உள்ள நிலையிலும் அவரை தலைவர் என்ற காரணத்தினால் நாமினேட் செய்ய முடியாத நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர். இருப்பினும் மதுமிதா, மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் மற்றும் வனிதா விஜயகுமார் இந்த வார எலிமினேஷன்க்கு நாமினேட் செய்யப்பட்டனர்.

சென்ற வாரம் அதிக வாக்குகளை பெற்று மக்களால் முதலாவதாக காப்பாற்றப்பட்டார் மதுமிதா. மீரா மிதுன், மற்றும் சரவணனும் ஓரளவுக்கு வாக்குகளை பெற்றனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக எலிமினேஷன் ப்ராசஸை மோகன் வைத்யா மற்றும் வனிதா விஜயகுமார் சந்திக்கின்றனர். வனிதாவுக்கு வீட்டிலும் வெளியிலும் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் அவர் எலிமினேட் ஆக வேண்டும் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனினும் சென்ற வாரம் சாக்ஷியோ மீராவோ எலிமினேட் செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் வெளியேறவில்லை. மேலும் சென்ற சீசன்களில் எல்லோராலும் திட்டித் தீர்க்கப்பட்ட காயத்ரி, ஜூலி, ஐஸ்வர்யா அனைவருமே கடைசி வரை பிக்பாஸில் இடம் பிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படித்தான் வனிதாவும் வீட்டில் தக்க வைக்கப்படுவார் என்று ரகிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

        

இந்த முறையும் இது போன்று எதிர்பாராத  விதமாக எதாவது நடக்குமா அல்லது வனிதா வெளியேற்றப் படுவாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  வீட்டிலும் சரி, வெளியிலும் சரி வனிதா எலிமினேட் ஆக வேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 
   

NEXT STORY
பிக்பாஸ் சீசன் 3: நாமினேஷன் முடிஞ்சுது... வனிதாவை வெளியே அனுப்புவாரா பிக்பாஸ்?! Description: பிக்பாஸ் சீசன் 3-ல் இரண்டாவது வாரம் நாமினேஷன் ப்ராஸஸ் முடிந்து ஒரு வழியாக எல்லோரும் எதிர்பார்த்த வனிதா நாமினேட் ஆகிவிட்டார். வனிதாவை வெளியே அனுப்புவாரா பிக்பாஸ்?!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola