பிரச்னைகள் முடிந்து இன்று வெளியானது விஷாலின் அயோக்யாவும் அதர்வாவின் 100 திரைப்படமும்!

சினிமா
Updated May 11, 2019 | 12:08 IST | Zoom

இரண்டு படங்களின் பிரச்னைகளும் சுமூகமாக முடிந்து இன்று சனிக்கிழமை, காலை 9 மணிமுதல் திரையரங்குகளில் ரிலீஸானது. இதுகுறித்து விஷாலும் அதர்வாவும் ட்வீட் செய்திருக்கிறார்கள்.

vishal's ayogya and atharvaa's 100th the movie released today
அதர்வா, விஷால்  |  Photo Credit: Twitter

விஷால் நடிப்பில் அயோக்யா திரைப்படம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்பிறகு ரிலீஸ் தேதி தள்ளிபோய் இன்று மே-10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருந்தது. 

ஆனால் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகவில்லை. தெலுங்கில் 2015-ஆம் ஆண்டு வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா. டெம்பர் படத் தயாரிப்பளர் அனைத்து மொழி உரிமையையும் ஹிந்தி தயாரிப்பாளருக்கு விற்றுவிட்டதாகவும் தற்போது எப்படி தமிழில் மட்டும் தனியாக படம் எடுக்க முடியும் என்றும் தடை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் டார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் தயாரான 100 திரைப்படமும் மே 3-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படம் வெளியாகவில்லை. பின் மே 9-ஆம் தேதிக்கு மாற்றினர்.ஆனால் அன்றும் படம் ரிலீஸாகவில்லை. இந்தப்படம் கே.டி.எம் பிரச்னையால்தான் தள்ளிப்போகிறது என்று கூறப்பட்டுவந்த நிலையில் இரண்டு படங்களின் பிரச்னைகளும் சுமூகமாக முடிந்து இன்று சனிக்கிழமை, காலை 9 மணிமுதல் திரையரங்குகளில் ரிலீஸானது. இரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் விக்ரம் வேதாவுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இது குறித்து ட்வீட் செய்திருக்கும் அதர்வா, மன உறுதிதான் எல்லாமே. அனைத்து தடைகளையும் தாண்டி இன்று நாங்கள் வந்துவிட்டோம். உங்களது அன்பால் இன்று திரைப்படம் ரிலீஸ் ஆனது என்று பதிவிட்டிருக்கிறார்.

 

 

அதேபோல விஷாலும் நெவர் எவர் கிவ் அப் என்று தன் ஸ்டைலில் பஞ்ச் டயலாகை ட்வீட் செய்திருக்கிறார். இந்தப்படம் மிகவும் முக்கியமானப் படமென்றும், பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும் என்ற சமூக பிரச்னையைப் பேசும்படம் என்பதால் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று கூறியிருக்கிறார் விஷால்!

NEXT STORY
பிரச்னைகள் முடிந்து இன்று வெளியானது விஷாலின் அயோக்யாவும் அதர்வாவின் 100 திரைப்படமும்! Description: இரண்டு படங்களின் பிரச்னைகளும் சுமூகமாக முடிந்து இன்று சனிக்கிழமை, காலை 9 மணிமுதல் திரையரங்குகளில் ரிலீஸானது. இதுகுறித்து விஷாலும் அதர்வாவும் ட்வீட் செய்திருக்கிறார்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola