விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ உடன் மோதும், விஷாலின் ’ஆக்‌ஷன்’; நவம்பர் 15-ல் ரிலீஸ்!

சினிமா
Updated Nov 05, 2019 | 12:36 IST | Zoom

நவம்பர் 15-ல் வெளியாகும் விஷால் நடிக்கும் ’ஆக்‌ஷன்’, விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ படத்துடன் பாக்ஸ் ஆபீசில் மோதுகிறது.

Vishal, Tamannah in Action, விஷால், தமன்னா நடிக்கும் ’ஆக்‌ஷன்’
விஷால், தமன்னா நடிக்கும் ’ஆக்‌ஷன்’  |  Photo Credit: Twitter

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா இணைந்து நடிக்கும் ’ஆக்‌ஷன்’ திரைப்படம் இம்மாதம் 15-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ படமும் இதே நாளில் வெளியாகிறது.

முழுநீல ஆக்‌ஷன் படமாக ’ஆக்‌ஷன்’ இருக்கும் என்பது சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் தெரிந்தது. துருக்கி, அசர்பைஜான் ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ஆக்‌ஷன் படத்தில் தமன்னா, ஐஷ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 27-ஆம் தேதி ஆக்‌ஷன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. யூடியூபில் இதுவரை 38 லட்சம் முறை இந்த ட்ரெய்லர் பார்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் 22-ஆம் தேதியன்று ’நீ சிரிச்சாலும்’ என்ற முதல் பாடல் வெளியானது. ’லைட்ஸ் கேமரா ஆக்‌ஷன்’ எனும் இரண்டாவது பாடல் நவம்பர் 2-ஆம் தேதி வெளியானது.

 

 

 

 

டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு ’ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தில் மூலம் 5-வது முறையாக சுந்தர்.சி - ஆதி கூட்டணி இணைந்துள்ளது. இதற்கு முன் சுந்தர்.சி இயக்கிய ’ஆம்பள’, ’அரண்மனை 2’, ’கலகலப்பு 2’, ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களுக்கு ஆதி இசையமைத்தார். அதே போல, ஆம்பள படத்தை தொடர்ந்து விஷாலுடன் இரண்டாவது முறையாக ஆதியுடன் இணையும் படமிது. தற்போது இந்தத் திரைப்படம் விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ படத்துடன் வரும் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. 

NEXT STORY