எனது நேர்மையை நிரூபிக்க இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் - விஷால் பேட்டி

சினிமா
Updated Jun 08, 2019 | 17:44 IST | Zoom

நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டவிடாமல் தடுக்கப் பலர் முயற்சி செய்து வருகிறார்கள் என்று விஷால் தெரிவித்தார்.

vishal
விஷால்  |  Photo Credit: Twitter

நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ஆம் தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் பாண்டவர் அணியின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் மீண்டும் அந்தப் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு, கோவை சரளா, பிரசன்னா, பசுபதி, சோனியா போஸ், மனோபாலா, நந்தா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘’ தேர்தல் நெறுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதைத் தடுக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதனாலேயே எங்களுக்கு எதிரணி உருவாகியுள்ளது. 

எனது நேர்மையை நிரூபிக்கும் பொருட்டே நான் மீண்டும் போட்டியிடுகிறேன். தேர்தலினால் கட்டிடத்துக்கு  எந்தவிதமான தடையும் விடுக்கக்கூடாது. இந்த கட்டிடம் மூலம் பல நல்ல திட்டங்களையும் செய்யவிருக்கிறோம். நாங்கள் தற்போது பதவியில் இருக்கும்போது மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் எங்கள் சக்திக்கு மேலேயே நாங்கள் செய்திருக்கிறோம். இன்னும் 6 மாத காலத்துக்குள் கட்டிடம் முடிந்துவிடும், இந்த முறையும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். 


 

NEXT STORY
எனது நேர்மையை நிரூபிக்க இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் - விஷால் பேட்டி Description: நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டவிடாமல் தடுக்கப் பலர் முயற்சி செய்து வருகிறார்கள் என்று விஷால் தெரிவித்தார்.
Loading...
Loading...
Loading...