ஆக்ஷனில் மிரட்டும் விக்ரம்! வெளியானது 'கடாரம் கொண்டான்' டிரெய்லர்

சினிமா
Updated Jul 03, 2019 | 20:47 IST | Zoom

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா சியான் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் கடாரம் கொண்டான்.

Actor Vikram's Kadaram Kondan trailer
'கடாரம் கொண்டான்' டிரெய்லர் 

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா விக்ரமை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இது சியான் விக்ரமிற்கு 56-வது படமாகும்.

கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். படம் முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து புரடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 


 

 

டிரெய்லரை பார்க்கும் போது விக்ரமின் கெட்டப் படு மிரட்டலாக வந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

 

கடாரம் கொண்டன் விக்ரமின் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

NEXT STORY
ஆக்ஷனில் மிரட்டும் விக்ரம்! வெளியானது 'கடாரம் கொண்டான்' டிரெய்லர் Description: தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா சியான் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் கடாரம் கொண்டான்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles