ஸ்ருதி ஹாசன் பாடிய கடாரம் கொண்டான் சிங்கிள் வெளியானது!

சினிமா
Updated May 01, 2019 | 11:14 IST | Zoom

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இன்று வெளியான பாடலை ஸ்ருதி ஹாசனுடன் இசையமைப்பாளர் ஷபீர் பாடியிருக்கிறார்.

vikram's kadaram kondan single is out sung by shruti haasan check here
vikram's kadaram kondan single is out sung by shruti haasan check here   |  Photo Credit: YouTube

விக்ரமின் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் மே-1 ஆன இன்று வெளியானது.

தூங்காவனம் பட இயக்குநர் ரமேஷ் எம்.செல்வா இயக்கத்தில் தயாராகிக் கொண்டு இருக்கிறது விக்ரமின் 56-வது திரைப்படம் கடாரம் கொண்டான். இதில் விக்ரமுடன் அக்‌ஷரா கமலஹாசன் நடிக்கிறார். இந்தப்படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. 

போன வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு சிலபல காரணங்களால் தாமதமாகி இந்த ஜனவரி மாதம்தான் டீஸர் வெளியானது. தற்போது மே-1 ஆம் தேதியான இன்று படக்குழு படத்தின் சிங்கிளை ரிலீஸ் செய்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இன்று வெளியான பாடலை ஸ்ருதி ஹாசனுடன் இசையமைப்பாளர் ஷபீர் பாடியிருக்கிறார். பாடலாசிரியர் பிரியன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

 

 

இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சரி கடாரம் கொண்டான் என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?

ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கடாரம் என்றப் பகுதியை போர் புரிந்து வெற்றிபெற்றபின் அவருக்கு கடாரம் கொண்டான் என்றப் பெயர் வந்தது. கடாரம் கொண்டான் என்பது ராஜேந்திர சோழனின் மற்றொரு பெயராகும்! 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...