'கடாரம் கொண்டான்' படத்தின் அடுத்த சிங்கிள் வெளியானது

சினிமா
Updated Jul 10, 2019 | 18:15 IST | Zoom

சீயான் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படத்தின் அடுத்த சிங்கிளான 'தாரமே தாரமே' பாடல் வெளியாகிவுள்ளது.

கடாரம் கொண்டான்
Kadaram Kondan  |  Photo Credit: Twitter

'சாமி 2' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' படத்தின் அடுத்த சிங்கிளான 'தாரமே தாரமே' பாடல் தற்போது வெளியாகிவுள்ளது.     

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. 2015-ஆம் ஆண்டு வெளியான 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இப்படத்தை இயக்கியுள்ளார். அக்ஷரா ஹாசன், அபி ஹாசன், லேனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து கமலின் படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிப்ரான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ஸ்ருதி ஹாசன் பாடியிருந்த இப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். சென்ற ஜூலை 3 ஆம் தேதி 'கடாரம் கொண்டான்' படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடந்தது. அவ்விழாவில் பேசிய கமல் ஹாசன் இப்படம் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று  இப்படத்தின் இரண்டாவது பாடல் பாடல் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது அறிவித்தபடி 'கடாரம் கொண்டான்'  படத்தின் 'தாரமே தாரமே' பாடல் வெளியாகிவுள்ளது.

 

 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த மெலடி பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேகா இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். 

NEXT STORY
'கடாரம் கொண்டான்' படத்தின் அடுத்த சிங்கிள் வெளியானது Description: சீயான் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படத்தின் அடுத்த சிங்கிளான 'தாரமே தாரமே' பாடல் வெளியாகிவுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola