விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் "தளபதி 64"! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா
Updated Aug 24, 2019 | 19:40 IST | Zoom

விஜய் நடிக்கும் 64 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vijay's Next Film
Vijay's Next Film  |  Photo Credit: Twitter

விஜய் நடிக்கும் 63-வது படமாக 'பிகில்' உருவாகி வருகிறது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீயுடன் 3-வது முறையாக விஜய் இணைந்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளாா். ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் பாடல்களை எழுதியுள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் 64-வது படம் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

 

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2020-ல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணியை செய்ய உள்ளார். ஸ்டன்ட் சில்வா ஃபைட் மாஸ்டராக ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் 64 பட அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து #Thalapathy64 எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.

NEXT STORY