இன்று மாலை 'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட், இதுதானோ?!

சினிமா
Updated Jul 08, 2019 | 14:23 IST | Zoom

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது.

Bigil
பிகில்  |  Photo Credit: Twitter

'தெறி', 'மெர்சல்' படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் 3-வது முறையாக நடித்துவரும் படம் 'பிகில்'. இந்நிலையில் இப்படத்தை பற்றிய அப்டேட் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிகில்' படத்தின் இணை தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன் ட்விட்டர் பக்கத்தில் தளபதி ரசிகர்களுக்கான பிரத்யேக அப்டேட் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என்றும், இந்த அப்டேட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர், இசை வெளியீடு தேதி, ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

இந்நிலையில் ரசிகர்கள் இது என்ன அப்டேடாக இருக்கும் என்று அவளோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.மேலும் சிலர் இது விஜய், 'பிகில்' படத்தில் பாடும் பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கும் அல்லது ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது குறித்த தகவலாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது தன் படங்களில் பாடிவரும் நடிகர் விஜய் இறுதியாக 'பைரவா' படத்தில் இடம்பெற்ற 'பாப்பா பாப்பா' பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

     

 

விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றது. விஜயின் 63-வது படமான 'பிகில்' திரைப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். 'மெர்சல்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஜி.கே.விஷ்ணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.'மெர்சல்' ,'சர்கார்' படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யின் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதிக எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்குவர இருக்கிறது.              
 

NEXT STORY
இன்று மாலை 'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட், இதுதானோ?! Description: விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola