தளபதி 63 டைட்டில் இனி ‘பிகில்’..இரட்டை வேடத்தில் விஜய் - வெளியானது பர்ஸ்ட் லுக், 2வது லுக்!

சினிமா
Updated Jun 22, 2019 | 08:24 IST | Zoom

விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

vijay 63, விஜய் 63
பிகில் பர்ஸ்ட் லுக்கில் விஜய்  |  Photo Credit: Twitter

சென்னை: இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், 2-வது லுக்கும் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கான ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது இந்த போஸ்டர்கள். இயக்குனர் அட்லி இயக்கத்தில் பெயர் சூட்டப்படாமல், விஜயின் 63வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த புதிய படம்.  பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற திரைப்படம் என்று கதை குறித்து சினிமா வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜயின் 63 வது திரைப்படமாக வெளியாகவிருக்கும் இதற்கு ’பிகில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், பர்ஸ்ட் லுக்கில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது போல இருந்தது. ஆனால் இரவு 12 மணிக்கு வெளியான செகண்ட் லுக்கில், அவரேதான் ஃபிளாஷ்பேக்கில் அப்படி இருக்கிறாரோவென்றும் தோன்றுகிறது. மேலும் இந்த செகண்ட் லுக்கில் மைக்கேல் என்று ஒரு பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எது எப்படியோ இந்த போஸ்டரைப் பார்த்தால் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் உறுதி எனத் தெரிகிறது!

 

 

 

விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ’பிகில்’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்றும், செகண்ட் லுக் நாளையும் (அதாவது இன்று இரவு 12 மணி) வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். 

அந்தவகையில் விஜய் நடிக்கும் இப்புதிய திரைப்படத்திற்கு ’பிகில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதை அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கால்பந்தாட்ட வீரர் லுக்கில் ஒரு விஜய் மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் குப்பத்து ரவுடி லுக்கில் ஒரு விஜய் லுக்கும் இடம் பெற்றுள்ளன. இதனால் கதை கால்பந்தாட்டத்தை மையமாக வைத்ததுதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், எளிய மக்கள் வசிக்கும் குப்பம் சார்ந்த கதைக்களமும் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.  ஏற்கனவே நாளை விஜயின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டர் முழுவதும் விஜய் குறித்த ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY