காது சரியாக் கேக்காத விஜய் சேதுபதி, சத்தமாகப் பேசும் அஞ்சலி! வெளியானது 'சிந்துபாத்' ட்ரெய்லர்...

சினிமா
Updated Jun 17, 2019 | 13:22 IST | Zoom

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Sindhubaadh
சிந்துபாத்  |  Photo Credit: Twitter

எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள  'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.  'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'சிந்துபாத்'. நடிகை அஞ்சலியின் பிறந்தநாளையொட்டி இந்த ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர். 'பண்ணையாரும் பத்மினியும்','சேதுபதி' படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைத்துள்ளார் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

 

 


இந்த ட்ரெய்லர் வெளியாகிய 12மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி,ரொமான்ஸ்,சண்டை காட்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது இந்த ட்ரெய்லர்.மேலும் 'மார்கோனி மதாய்' எனும் விஜய் சேதுபதி நடித்துள்ள  மலையாள படத்தின் டீசர் வெளியான நிலையில்,'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் மலையாள ரசிகர்கள் இடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

 

 

விஜய் சேதுபதி, அஞ்சலி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதியும் நடித்துள்ளார்.இவர் இதற்கு முன்பு 'நானும் ரௌடி தான்' படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  சிந்துபாத் ஆடியோ நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ‘’ சிந்துபாத் எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான கணவன் மனைவி பற்றிய கதைதான். தனது மனைவியைக் கடல் கடந்து கடத்திச் சென்ற ஒருவனிடம் இருந்து அவளை மீட்டு வருவதே இந்தப்படம். இந்தப்படத்தில் ஹீரோவான எனக்கு அரைகுறையாகதான் காது கேட்கும். சத்தமாக பேசும் கதாப்பாத்திரம் அஞ்சலிக்கு. அவர் ஏற்கனவே சத்தமாகத்தான் பேசுவார். இந்த கதாப்பாத்திரத்துக்கு அஞ்சலியை விட்டால் வேறு யாரும் இந்த அளவுக்கு நடித்திருக்க முடியாது.  இந்த படத்தின் இரண்டாவது பாகம் முழுக்கவே க்ளைமேக்ஸ் போலதான் இருக்கும். நானும் இந்தப் படத்தை மிகவும் ஆர்வமாக வரவேற்க்கக் காத்திருக்கிறேன்’’ என்று கூறினார். இந்தப்படம் வரும் ஜூன்-21 அன்று ரிலீஸாக இருக்கிறது.          

 

NEXT STORY
காது சரியாக் கேக்காத விஜய் சேதுபதி, சத்தமாகப் பேசும் அஞ்சலி! வெளியானது 'சிந்துபாத்' ட்ரெய்லர்... Description: விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola