'மார்கோனி மதாய்’ பர்ஸ்ட் லுக் வெளியானது - விஜய் சேதுபதி நடிக்கும் முதல் மலையாளப்படம்!

சினிமா
Updated Jun 11, 2019 | 21:27 IST | Zoom

விஜய் சேதுபதி மலையாள சினிமா உலகிலும் தனது வலது காலை பதித்துள்ளார். மலையாள இயக்குனர் சஜன் கலத்தில் இயக்கும் ‘மார்கோனி மதாய்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. 

cinema, சினிமா
விஜய் சேதுபதி  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: தமிழ் சினிமாவின் செல்லமான ஹீரோவான விஜய் சேதுபதி நடித்து வரும் முதல் மலையாளப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கைகளில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு படங்களுடன் தமிழ் சினிமா உலகில் மாஸ் காட்டி வரும் ஹீரோ விஜய் சேதுபதி. 

இவர் ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும், மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

 

இந்நிலையில் விஜய் சேதுபதி மலையாள சினிமா உலகிலும் தனது வலது காலை பதித்துள்ளார். மலையாள இயக்குனர் சஜன் கலத்தில் இயக்கும் ‘மார்கோனி மதாய்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. 

மார்கோனி மதாய் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அழகான சிரிப்புடன் இதில் வித்யாசமாக காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
'மார்கோனி மதாய்’ பர்ஸ்ட் லுக் வெளியானது - விஜய் சேதுபதி நடிக்கும் முதல் மலையாளப்படம்! Description: விஜய் சேதுபதி மலையாள சினிமா உலகிலும் தனது வலது காலை பதித்துள்ளார். மலையாள இயக்குனர் சஜன் கலத்தில் இயக்கும் ‘மார்கோனி மதாய்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles