நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? - விஜய் சேதுபதி விளக்கம்

சினிமா
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 12, 2019 | 16:47 IST

சமீபத்தில் நடைபெற்ற சிந்துபாத் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடிகர் சங்கத் தேர்தல் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தார்.

vijay sethupathi
விஜய் சேதுபதி  |  Photo Credit: Twitter

சமீபத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் சிந்துபாத் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தை சேதுபதி படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கி இருக்கிறார். ஆடியோ நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ‘’ சிந்துபாத் எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான கணவன் மனைவி பற்றிய கதைதான். தனது மனைவியைக் கடல் கடந்து கூட்டிச்சென்ற ஒருவனிடம் இருந்து கணவன் அவளை மீட்டு வருவதே இந்தப்படம். இந்தப்படத்தில் ஹீரோவான எனக்கு அரைகுறையாகதான் காது கேட்கும். சத்தமாக பேசும் கதாப்பாத்திரம் அஞ்சலிக்கு. அவர் ஏற்கனவே சத்தமாகத்தான் பேசுவார். இந்த கதாப்பாத்திரத்துக்கு அஞ்சலியை விட்டால் வேறு யாரும் இந்த அளவுக்கு நடித்திருக்க முடியாது.  இந்த படத்தின் இரண்டாவது பாகம் முழுக்கவே க்ளைமேக்ஸ் போலதான் இருக்கும். நானும் இந்தப் படத்தை மிகவும் ஆர்வமாக வரவேற்க்கக் காத்திருக்கிறேன்’’ என்று கூறினார். இந்தப் படம் வரும்  ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்த ஆடியோ நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு ''நான் ஒரு அணியில் பேசியிருக்கிறேன் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள் அவர்களை நான் நம்புகிறேன். அது எந்த அணி என்று நான் கூறமாட்டேன். யார் சரின்னு நினைக்கிறேனோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன். நல்லது நடந்தா சந்தோஷம், வெளியில் இருந்து பார்க்கும் உங்களுக்கு பெரிய நடிகர்கள்தான் கண்ணுக்குத் தெரியும். ஆனால் இங்கே பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் நன்றாக இருக்கவேண்டும். அவர்களுக்கு இங்கே நிறைய பிரச்னைகள் இருக்கிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்ததுதான் சினிமா. இவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு நான் ஓட்டுப் போடுவேன்'' என்று கூறினார். 

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், குஷ்பு, கோவை சரளா, லதா உட்பட அனைவரும் பாண்டவர் அணியிலும் பாக்யராஜ் தலைமையில் குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், நிதின் சத்யா, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் சங்கரதாஸ் அணியிலும் போட்டி இடுகிறார்கள்.. 

 

https://www.youtube.com/playlist?list=PLvoeH2twomIwqk4WNNgpZzezLUFI0g583


 

 

NEXT STORY