வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்' டிரைலர்

சினிமா
Updated Jul 12, 2019 | 11:43 IST | Zoom

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

'Dear Comrade' Trailer
'டியர் காம்ரேட்' படத்தின் ட்ரெய்லர்   |  Photo Credit: Twitter

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'டாக்ஸிவாலா' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

 

 

இப்படத்தின் தமிழ் வர்ஷன் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் எனக்கு உண்மையான காம்ரேடாக இருந்துள்ளீர்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

கோவம் கொண்ட இளைஞராக விஜய் தேவர்க்கொண்டவும், கிரிக்கெட் வீராங்கனையாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. நேற்று வெளியாகி இதுவரை 4 மில்லியன் பார்வைகளுக்கும் மேல் கடந்துள்ளது. இப்படம்  ஜூலை 26-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.          
 

NEXT STORY
வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்' டிரைலர் Description: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola