’தளபதி 64’ இயக்கப்போகும் இயக்குனர் ’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்?!

சினிமா
Updated May 13, 2019 | 22:42 IST | Zoom

விஜய் நடிப்பில் 64வது திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cinema, சினிமா
நடிகர் விஜய்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 64 திரைப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சர்க்கார் படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

பெயரிடப்படாத இத்திரைப்படம் தளபதி 63 என்று அழைக்கப்படுகிறது. கால்பந்தாட்டாத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகின்ற இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் 64வது திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தவர் இயக்குனர் லோகேஷ். முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான், இவரது கதை பிடித்துவிட்டதால் விஜய் அடுத்தபட வாய்ப்பை இவருக்கு கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

NEXT STORY
’தளபதி 64’ இயக்கப்போகும் இயக்குனர் ’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்?! Description: விஜய் நடிப்பில் 64வது திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles