அனுஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு, ’நிசப்தம்’ டீசரை வெளியிட்ட படக்குழு

சினிமா
Updated Nov 07, 2019 | 13:05 IST | Zoom

38-வது பிறந்தநாள் கொண்டாடும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிறந்தநாள் பரிசாக ’நிசப்தம்’ டீசர் அமைந்துள்ளது.

Anushka Shetty, நடிகை அனுஷ்கா ஷெட்டி
நடிகை அனுஷ்கா ஷெட்டி  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ’நிசப்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹாரர்-திரில்லர் படமாக உருவாகியுள்ள நிசப்தம், அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது 1:14 நிமிடங்கள் ஓடும் டீசர் மூலம் தெரியவருகிறது.

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் நிசப்தம் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, சுப்பராஜு, ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கெல் மேட்சன் ஆகியோர் நடித்துள்ளமர். ஹேமந்த் மதுகர் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுஷ்கா இதில் வாய்ப்பேச முடியாத கதாப்பாத்திரத்திலும் மாதவம் ஒரு இசைக் கலைஞராகவும் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகள் படமாக்கப்பட்டுள்ள நிசப்தம் திரைப்படத்தை பீபிள் மீடியா ஃபேக்டரி மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், ஷேனீல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

 

நடிகை அனுஷ்கா ஷெட்டி திரைத்துறையில் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி நிசப்தம் படத்தின் டைட்டில் லுக் வெளியானது. இதை தொடர்ந்து அனுஷ்காவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டபர் 11-ல் வெளியிடப்பட்டது. அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்கும் மாதவனின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியானது. டீசருக்கு முன்னோட்டமாக ப்ரீ-டீசர் திபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 27-ல் ரிலீசானது. மேலும், நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 1-ஆம் தேதி வெளியானது.

NEXT STORY