'வில்லனாக’ மிரட்ட வருகிறார் ‘மங்காத்தா’ இயக்குனர் வெங்கட் பிரபு!

சினிமா
Updated Apr 23, 2019 | 15:29 IST | Zoom

நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘ஜருகண்டி’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்தை ஹைபட்ஜெட்டில் தயாரிக்கிறார். 

cinema, சினிமா
வெங்கட் பிரபு  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் சினிமாவின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, புதிய படமொன்றில் வில்லனாக அவதாரம் எடுக்கிறார்.

நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘ஜருகண்டி’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்தை ஹைபட்ஜெட்டில் தயாரிக்கிறார். 

இதில். நடிகர் வைபவ் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும், ’சின்னத்திரை நயன்தாரா’ என வர்ணிக்கப்படும் நடிக வாணி போஜன் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் முதன்முறையாக மாஸ் காட்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவரும் வைபப் போலவே இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரிதானாம். ஆனால், மூர்த்தி என்கிற முரட்டு ’வில்லன்’ காவல்துறை அதிகாரி. 

இயக்குனராவதற்கு முன்பே வெங்கட் பிரபு ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், வசந்தம் வந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை 28க்கு பிறகு வெங்கட் பிரபு முழுநேர இயக்குனராக மாறி மங்காத்தா உள்ளிட்ட சக்சஸ்புல் படங்களைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிநி சார்லஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திகில் திரைப்படமான இதன் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

NEXT STORY
'வில்லனாக’ மிரட்ட வருகிறார் ‘மங்காத்தா’ இயக்குனர் வெங்கட் பிரபு! Description: நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘ஜருகண்டி’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்தை ஹைபட்ஜெட்டில் தயாரிக்கிறார். 
Loading...
Loading...
Loading...