காலத்தால் அழியாத காவியம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் - வெளியாகி 60 வருடம் நிறைவு!

சினிமா
Updated May 16, 2019 | 15:54 IST | Times Now

தமிழ் சினிமாவின் ஐகானிக் மூவிக்களில் ஒன்றாக இன்றளவும் சுட்டிக் காட்டப்படும் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தின் பின்னால் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.

cinema, சினிமா
கட்டபொம்மன் மேடை நாடகத்தில் சிவாஜி  |  Photo Credit: Facebook

சென்னை: தமிழ் சினிமாவின் சிறப்பு மிக்க வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’க்கு இன்றுடன் 60 வயது நிறைவடைகிறது.

259 வயது நிறைந்த ரியல் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, திரையில் இன்று 60 வயது. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1959ம் ஆண்உ இதேநாளில் வெளியாகியுள்ளது. 

பி.ஆர். பந்தலு இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வாழ்ந்திருந்த திரைப்படம் இது.  ஆங்கிலேயர்கள்  பிடியில் இந்திய நாடு இருந்த காலகட்டத்தில், நெஞ்சம் நிமிர்த்தி அவர்களுடைய அடக்குமுறையை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கார மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்.

தமிழ் சினிமாவின் ஐகானிக் மூவிக்களில் ஒன்றாக இன்றளவும் சுட்டிக் காட்டப்படும் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தின் பின்னால் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. சிவாஜி நாடக மன்றத்தால் 1957ம் ஆண்டில் முதன் முதலில் மேடை நாடகமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கதை மக்களைச் சென்றடைந்தது. 

நாடு முழுவதும் பல்வேறு மேடைகளில் நிகழ்த்தப்பட்ட இந்த நாடகம், கிட்டதட்ட 32 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியது. அந்த மொத்த தொகையையும் சிவாஜி கணேசன் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக அளித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய இந்த நாடகம் திரைப்படமாக வெளிவந்த பிறகும் 12 முறை மேடை அரங்கேற்றம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் முதல் பயோபிக் திரைப்படமும் இதுதான். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக முதன்முதலில் சர்வதேச விருது வென்ற, முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமை சிவாஜிக்கு கிடைத்தது இந்த படத்தால்தான். எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆஃப்ரோ ஆசியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில், சிறந்த திரைப்பட விருதையும் கூடவே தட்டிச் சென்றது. 

தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது இந்தப் படம். டெக்னோகலர் திரைப்படமாக லண்டனின் மெருகேற்றப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்.  

பிரிட்டனின் ஹைகமிஷனராக இருந்த விஜயலட்சுமி பண்டிட்டுக்கு இந்த திரைப்படம் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு இந்த திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிடப்பட்டது.

1959ம் ஆண்டில் வெளியானபோதே கிட்டதட்ட 100 நாட்களைத் தாண்டி தமிழகத்தில் ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது இந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் ‘யாரை கேட்கிறாய் வட்டி’ என்கிற டயலாக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தோற்றத்தை, வீரத்தை, நடையை அப்படியே திரையில் கொண்டுவந்த சிவாஜியும் காலத்தால் அழியாத நினைவடுக்குச் சின்னங்கள் என்றால் மிகையில்லை!


 

NEXT STORY
காலத்தால் அழியாத காவியம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் - வெளியாகி 60 வருடம் நிறைவு! Description: தமிழ் சினிமாவின் ஐகானிக் மூவிக்களில் ஒன்றாக இன்றளவும் சுட்டிக் காட்டப்படும் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தின் பின்னால் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles