பிக்பாஸில் வனிதா ரீ - என்ட்ரி; இன்னிக்கு இருக்கு கச்சேரி! - பிக்பாஸ் ப்ரோமோஸ்

சினிமா
Updated Aug 12, 2019 | 16:14 IST | Zoom

பிக்பாஸ் வீட்டிக்குள் மீண்டும் வனிதா விஜயகுமார் இன்று ரீ - என்ட்ரி ஆகியிருக்கிறார். இதனால் அவரது ஆர்மி கொண்டாட்டத்தில் உள்ளது!

Vanitha enters BiggBoss house again
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா   |  Photo Credit: Twitter

பிக்பாஸ் சீசன் 3-யில் மீண்டும் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது போன்ற ப்ரோமோக்கள் இன்று வெளியாகியுள்ளன. 

பிக்பாஸ் சீசன் 3-யில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் ஆகியோரை தொடர்ந்து 7-வது போட்டியாளராக சாக்ஷி அகர்வால் நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் மீண்டும் வனிதா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஹோட்டல் ஊழியர்களை போல் ஆடை உடுத்திக்கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் ஹோட்டலுக்கு ஒருவர் வரவுள்ளார் என்று கூற, அனைவரும் மெயின் டோரில் யார் வரப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் வனிதா வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். அவரின் வருகையால் கவின், சாண்டி என பலரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க சேரன் அவருக்கு மாலை போட்டு வரவேற்றார்.        

 

 

 

இதனை தொடர்ந்து வழக்கம் போல் பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டார் வனிதா. லாஸ்லியா, அபிராமி என யாரையும் விடவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் செய்யும் லவ் எல்லாம் வர்த் இல்லை என்று தெரிவித்தார். மேலும் கவினிடம் தான் நிறைய பேசவேண்டும் என்று நினைத்ததாகவும், ஆனால் பேச மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். கவின் வீட்டுக்குள் செய்யும் லவ் எல்லாம் வர்த் இல்லை என்றும் தெரிவிக்க கவின் மௌனமாகவே இருந்தார்.    

 

    

 

இறுதியாக வெளியான ப்ரோமோவில் வீட்டுக்குள் அனைவரும் உறவுகளாக பழகுவதையும் விமர்சித்துள்ளார். நேற்று எபிசோடில் கமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் யார் வெற்றி பெறுவார் என்று கேட்ட போது பலரும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தது போல் கூறினர். குறிப்பாக அனைவரும் தர்ஷன் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளதால் அவர் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனை வனிதா கடுமையாக விமர்சித்து அப்பா பொண்ணு என்றல்லாம் சொல்லி விட்டுக்கொடுக்க தயாராக இருந்தால் வீட்டுக்கு கிளம்பும் படி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

 

வனிதா வீட்டுக்குள் வந்ததை குறிக்கும் ப்ரோமோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கெஸ்ட் ஆக இன்று ஒருநாள் மட்டும் இருப்பாரா அல்ல ஒரேயடியாக வீட்டுக்குள் தங்கிவிடுவாரா என்று இன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரிந்துவிடும். இதே போன்றுதான் முதல் சீசனில் ஆர்த்தி, ஜூலி ஆகியோர் நடுவில் ஒரு வாரம் தங்கிவிட்டு சென்றனர். பல முன்னணிப் போட்டியாளர்கள் சென்றுவிட்டதால் பிக்பாஸ் சற்று டல்லடிக்கத் துவங்கி உள்ளது என்று பிக்பாஸ் ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதனை ஈடுகட்ட இந்த வாரம் வனிதாவை உள்ளே அனுப்பியிருக்கலாம் என்றும் பிக்பாஸ் தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் கருதுகிறார்கள்!        
 

NEXT STORY
பிக்பாஸில் வனிதா ரீ - என்ட்ரி; இன்னிக்கு இருக்கு கச்சேரி! - பிக்பாஸ் ப்ரோமோஸ் Description: பிக்பாஸ் வீட்டிக்குள் மீண்டும் வனிதா விஜயகுமார் இன்று ரீ - என்ட்ரி ஆகியிருக்கிறார். இதனால் அவரது ஆர்மி கொண்டாட்டத்தில் உள்ளது!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...