வனிதா - தர்ஷன் இடையே கடும் மோதல்! பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையா?

சினிமா
Updated Jul 12, 2019 | 17:17 IST | Zoom

பிக்பாஸ் வீட்டில் இன்று வனிதாவுக்கு தர்ஷனுக்கும் மோதல் என்பதை குறிக்கும் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.

Vanitha and Darshan Fight
வனிதா தர்ஷன் மோதல்   |  Photo Credit: Twitter

பிக்பாஸ் வீட்டில் 19-வது நாளான இன்று, வனிதாவுக்கும் தர்ஷனுக்கும் ஏற்பட்ட மோதலை குறிக்கும் வகையில் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.  

பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பத்தில் சண்டை, அழுகை, ரொமான்ஸ் என்று சுவாரஸ்யமாக இருந்தாலும் தற்போது நிகழ்ச்சியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. வீட்டில் பெருசாக எந்த பிரச்சனையும் வராததே இதற்கு காரணம். ஆனால், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற போகிறது. பிக்பாஸ் கொடுத்த ஒரு போட்டியில் வனிதா கடுப்பாக தர்ஷன் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதை வனிதா ஏற்க மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்பு வனிதா இனி போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என்று கூறி மைக்கை தூக்கி அடித்தார். 

 

 

இந்த பிரச்சனைக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதை பற்றி பேசிக்கொண்டிருந்த போது தர்ஷன், வனிதா வீட்டில் யாரையும் பேசவிடமால் அவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாகவும், தான் அடங்கி போய்விடுவேன் என்று நினைத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் இதுவரை எந்த பஞ்சாயத்திற்கு போகாத நிலையில் தில்லாக வனிதாவை எதிர்த்து பேசியது ஷேரினை கவர்ந்துள்ளது.  

 

 

அடுத்தபடியாக வெளியான ப்ரோமோவில் லொஸ்லியா பட்டாம்பூச்சி போல் நடனமாட சொல்லி கொடுக்க, அபிராமி தன் நாட்டிய கலையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான முகேன் சுத்தியலை எடுத்து அபிராமியை துரத்த ஆரம்பித்துவிட்டார். நேசமணியின் ஆசிர்வாதங்கள் அவருக்கு இருந்தால் சரி!

 

  

சண்டை, ரொமான்ஸ், காமெடி என்று எல்லாம் இன்றைய நிகழ்ச்சியில் இருக்கும் என்று ப்ரோமோவில் தெரிகிறது. இன்னும் என்னலாம் இருக்கு என்று நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.       

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...