பிக்பாஸ் வீட்டில் இருந்து 2வது முறையாக வெளியேறினார் வனிதா

சினிமா
Updated Sep 16, 2019 | 09:57 IST | Zoom

பிக்பாஸ் சீசன் 3ல் இரண்டாவது முறையாக நேற்று வனிதா எவிக்ட் செய்யப்பட்டார்.

vanitha evicted from biggboss tamil again
vanitha evicted from biggboss tamil again  |  Photo Credit: YouTube

பிக்பாஸ் சீசன் 3 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 80 நாட்கள்  முடிவடைந்த நிலையில் இன்னும் 3 வாரங்களே மீதமுள்ளன. 17 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் சென்ற வாரம் வரை 8 பேரும் இருந்த நிலையில் நேற்று வனிதா எவிக்ட் செய்யப்பட்டார்.

தான் நாமினேட் ஆன முதல் வாரத்திலேயே வனிதா எவிக்ட் செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு கஸ்தூரி  வைல்டு கார்ட் எண்ட்ரியாக வந்தாலும் வனிதாவைப் போல சண்டை போடததால் மக்கள் அவரை ரசிக்கவில்லை.. இதனால் அவரும் எவிக்ட் ஆனார். அப்போதுதான் வனிதாவை மீண்டும் பிக்பாஸ் மற்றொரு வைல்டு கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பினார். 

முதலில் பிக்பாஸ் ரசிகர்கள் நாங்கள் ஓட்டுபோட்டு வெளியே அனுப்பினால் எப்படி பிக்பாஸ் உள்ளே அனுப்பலாம் என்று கோவப்பட்டாலும் பின் வனிதா வந்தபிறகே ஷோ பார்க்க நன்றாக இருந்ததால் வனிதாவை ஏற்றுக்கொண்டனர். வந்த முதல் வாரத்தில் நாமினேஷனில் இடம்பெறவில்லை, அடுத்த வாரத்தில் கேப்டனாக இருந்ததால் மீண்டும் நாமினேஷனில் வரவில்லை, பின் சென்ற வாரம்தான் அனைவரும் நாமினேட் செய்திருந்தனர், அந்த வாரத்திலும் கேப்டன் டாஸ்கில் பங்குபெற வாய்ப்பு வந்தும் வேண்டாம் என்று விலகிவிட்டார்.

இந்நிலையில் கமல் பங்குபெறும் வார இறுதி நிகழ்ச்சியில் நேற்று வனிதா எவிக்ட் செய்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் நேற்று வனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது கவின், சாண்டி, செரின், லாஸ்லியா, தர்ஷன், சேரன், முகேன் ஆகியோர் வீட்டுக்குள் உள்ளனர். 
 

NEXT STORY