காங்கிரசில் இருந்து விலகினார் ’இந்தியன்’ நடிகை ஊர்மிலா!

சினிமா
Updated Sep 10, 2019 | 15:45 IST | Times Now

"மும்பை காங்கிரசின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதை விடுத்து எனது பெயரை பயன்படுத்தி சிலர் உட்கட்சிப் பூசலில் ஈடுபடுவதை என்னால் ஏற்க முடியாது. எனது சித்தாந்தத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்."

Urmila Matondkar, ஊர்மிலா மாதோண்டகர்
ஊர்மிலா மாதோண்டகர்  |  Photo Credit: IANS

மும்பை: புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஊர்மிலா மாதோண்டகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்ற மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஊர்மிலா ஐந்து மாதங்களிலே ஆன நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மும்பை காங்கிரஸ் நிர்வாகிகளை கடுமையாக சாடியுள்ளார். 

அறிக்கையில் அவர் கூறியதாவது: “நான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். 16-ஆம் தேதி மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிண்ட் டியோராவிற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வராததை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகும் எண்ணம் எனக்கு முதல் முறை ஏற்பட்டது. பிறகு, ரகசிய விவரங்கள் கொண்ட அந்த கடிதம் ஊடகத்திற்கு கசிந்தது. இதனை நான் துரோகமாக கருதுகிறேன். கட்சியினர் யாரும் எனக்கு ஆதரவாக இல்லை.

தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபிக்க தவறிய சிலரை எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவர்களது செயற்பாடுகளை கண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் நன்மைக்காக மும்பை காங்கிரசில் சீர்திருத்தங்கள் கொண்டுவர முக்கிய நிர்வாகிகளால் முடியவில்லை அல்லது அவர்களுக்கு விருப்பம் இல்லை.

மும்பை காங்கிரசின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதை விடுத்து எனது பெயரை பயன்படுத்தி சிலர் உட்கட்சிப் பூசலில் ஈடுபடுவதை என்னால் ஏற்க முடியாது. எனது சித்தாந்தத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நேர்மை மற்றும் கண்ணியத்துடன் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன். எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்து உதவிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” இவ்வாறு அந்த அறிக்கையில் ஊர்மிலா தெரிவித்துள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...