'சைக்கோ' படத்தில் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

சினிமா
Updated Sep 19, 2019 | 17:59 IST | Zoom

அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி உருவாகியுள்ள 'சைக்கோ' படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடிக்கிறார்.

'சைக்கோ' படத்தில் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin plays a blind man in Mysskin's 'Psycho' movie
'சைக்கோ' படத்தில் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

மிஷ்கின் இயக்கும் 'சைக்கோ' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வையற்றவராக நடிக்கிறார்.

'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது. இந்நிலையில் இன்று 'சைக்கோ' படத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினின் கெட்டப் வெளியாகியுள்ளது. 

 

 

அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி 'சைக்கோ' படம் உருகிவாகியுள்ளது. அங்குலிமாலா கதையில் மிக கொடிய செயல்களை செய்துகொண்டிருக்கும், அங்குலிமாலா என்பவர் புத்தரை சந்தித்த பிறகு மனம் திருந்தி புத்தரை பின்பற்றுவர். இந்த கதையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் புத்தர் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அக்கதாபாத்திரத்திற்கு கௌதமன் என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கதாபாத்திரத்தில் கண்பார்வையற்றவராக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அங்குலிமாலா கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடித்துள்ளார். 

'சைக்கோ' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படத்தை பற்றிய அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்-2' படத்தை இயக்கவுள்ளார்.    
       

NEXT STORY