விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர்கள்

சினிமா
Updated Nov 05, 2019 | 14:47 IST | Zoom

விளம்பரத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கள் பேரமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

vijay sethupathi
vijay sethupathi  |  Photo Credit: Twitter

நடிகர் விஜய் சேதுபதி தற்போது லாபம், கடைசி விவசாயி, மாமனிதன், விஜய்யின் தளபதி 64 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவரது சங்கத்தமிழன் திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது.  

இந்நிலையில் சமீபத்தில் தீபாவளி சமயத்தில் புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் விஜய் சேதுபதி தோன்றி நடித்திருந்தார். அது மளிகை கடை வைத்திருப்பவர்கள், நேரடியாக கடைக்கு செல்லாமல் மண்டி என்ற ஆன்லைன் ஆப்ஸ் மூலமாக பலசரக்கு பொருட்களை வாங்கலாம் என்பது. 

இந்த ஆப்ஸால் தங்களது வியாபாரம் கெட்டுப்போகும் என இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் விஜய் சேதுபதிக்கு கண்டம் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த மண்டி செயலியால் சிறு, குறு வியாபாரிகளின் வருமானம் பாதிப்பதாகவும், மேலும் ஒரு பெரிய நடிகர் இப்படி ஒரு  விளம்பரத்தில் நடிக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், அவர் ஆன்லைன் வர்தகத்துக்கு துணைபோவதாகவும் விஜய் சேதுபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விஜய் சேதுபதியைக் கண்டித்து இன்று காலை ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கள் பேரமைப்பைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் பதாகைகளுடன் பேரணியாக சென்று அலுவலகத்துக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தும் அவர்கள் கேக்காததால் அனைவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர். 

NEXT STORY