கே.எஸ்.ரவிக்குமார் குரலைக் கேட்டு அழுத சேரன் - பிக்பாஸ் ப்ரோமோக்கள்

சினிமா
Updated Aug 25, 2019 | 18:55 IST | Zoom

சேரனின் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுடன் பேசியிருக்கிறார்.

Biggboss tamil, cheran crying
பிக்பாஸ் ப்ரோமோ - சேரன்  |  Photo Credit: YouTube

இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கே.எஸ். ரவிக்குமார் சேரனிடம் பேசும் ப்ரோமோவும் இடம்பெற்றிருக்கிறது.

சென்ற வாரம் லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்கான அம்மா நான் ஸ்கூல் போறேன் என்ற டாஸ்க் நடைபெற்றது அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் குழந்தைகளாக உடையணிந்து குழந்தைகளைப் போலவே பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக தங்களது ஆசிரியர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வார்கள். அதில் சேரன் தனது பள்ளி ஆசிரியர்கள் பற்றி கூறியபின், நான் ஒரு இயக்குநராக ஆவதற்கு காரணம் கே.எஸ்.ரவிக்குமார் சார்தான். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னை செதுக்கியது அவர்தான் என்று கூறியிருந்தார். 

இன்று கமல்ஹாசனின் ஸ்பெஷல் எபிசோட் நடைபெறும் அல்லவா, இதனால் ப்ரோமோக்கள் இடம் பெற்றிருக்கிறது. முதல் ப்ரோமோவில் லாஸ்லியாவை தனியாக அழைத்து கமல்ஹாசன் பேசுவது போன்ற வீடியோ இடம்பெற்றிருக்கிறது. நேற்று கமல்ஹாசன் அனைவருக்கும் இது போட்டி என்று ஞாபகப் படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் அனைவரையும் தனியே அழைத்து டோஸ் விட்டிருப்பார் போல...

 

 

அடுத்த ப்ரோமோவில் கவின், முகேனின் ஆசிரியர்கள் ஃபோனில் பேசுகிறார்கள் அவர்களின் குரலைக் கேட்டதும் இருவரு அழும் ப்ரோமோ வெளியானது.

 

 

அடுத்து மூன்றாவது ப்ரோமோவில் சேரனுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த டாஸ்கில் சேரன் இவரைப் பற்றிக் கூறினார் அல்லவா, அதனால் இவரை பேச வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் சாண்டி கலா மாஸ்டரைப் பற்றியும் பேசினார். அதனால் அவரும் பேசியிருப்பார் போலும்.

 

 

அடுத்ததாக 4வது ப்ரோமோவில்தான் எவிக்‌ஷனைப் பற்றிக் கூறியுள்ளார் கமல். நேற்று ஷூட்டிங் முடிந்ததற்குப் பிறகில் இருந்தே கஸ்தூரிதான் வெளியேற்றப்படார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்தப் ப்ரோமோவில் குழப்புவதுபோல காட்டப்பட்டுள்ளது. 

 


 

 

NEXT STORY