கோலிவுட்டில் நாளை மூன்றே படங்கள்தான் ரிலீஸ்- என்னென்ன தெரியுமா?

சினிமா
Updated Jun 13, 2019 | 15:11 IST | Zoom

மூன்று படங்களுமே மாஸ் ஹீரோக்கள் இல்லாத படங்கள்தான். ஆனாலும், ஹீரோவைத் தாண்டி நல்ல கதைகள் ஜெயிக்கும் காலம் இது.

cinema, சினிமா
தமிழ் சினிமா ரீலீஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் சினிமாவின் புதிய வரவுகளாக நாளை மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. நாளை வெளியாகும் மூன்று படங்களுமே மாஸ் ஹீரோக்கள் இல்லாத படங்கள்தான். ஆனாலும், ஹீரோவைத் தாண்டி நல்ல கதைகள் ஜெயிக்கும் காலம் இது.

முதலாவது திரைப்படம் நடிகை டாப்ஸி நடித்திருக்கும் ‘கேம் ஓவர்’ திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்த பைலிங்குவல் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் சரவணன். மூன்று வருடங்களுப் பிறகு கோலிவுட்டிற்குள் மீண்டும் இந்த திரைப்படம் மூலமாக வருகிறார் டாப்ஸி. 

திரில்லர் மற்றும் அமானுஷ்யம் கலந்த கதைக்களத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும் திரைக்கதையுடன் உருவாகியுள்ளதாம் இந்த திரைப்படம். டாப்ஸியுடன் இணைந்து வினோதினி, அனிஷ், சஞ்சனா, ரம்யா சுப்ரமணியன் ஆகியோரும் நடித்துள்ளனர். 

 

 

நடிகர் விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோரின் நடிப்பில் நாளை வெளியாகிறது ’சுட்டுப் பிடிக்க உத்தரவு’ திரைப்படம். ராம்பிரகாஷ் ராயப்பா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிகக்குறைவான நாட்களில் இந்தப் படம் முழுவதுமாக ஷூட் செய்யப்பட்டு முடிக்கப்பட்டதாம். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயனும், டீசரை நடிகர் தனுஷும் வெளியிட்டு இருந்தனர்.

 

 

இந்த இரண்டு படங்கள் இல்லாமல் நாளை வெளியாகும் மற்றொரு தமிழ்த் திரைப்படம், ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’. இதுவும் சின்ன பட்ஜெட் படம்தான். விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளர் ரியோ ராஜ் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் இணைந்து காமெடியில் களைகட்டியிருக்கும் படம் இது. முழுக்க முழுக்க கமர்ஷியல் சப்ஜெக்ட். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். யூடியூப் மூலம் பிரபலமான கலைஞர்கள் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்த மூன்று படங்கள் இல்லாமல் மம்முட்டி நடிப்பில் மலையாள ‘உண்டா’, பிரபுதேவா-தமன்னா நடிப்பில் இந்தி ‘காமோஷி’, தி சீக்ரெட் லைப் ஆஃப் பெட்ஸ் ஆகிய திரைப்படங்களும் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
கோலிவுட்டில் நாளை மூன்றே படங்கள்தான் ரிலீஸ்- என்னென்ன தெரியுமா? Description: மூன்று படங்களுமே மாஸ் ஹீரோக்கள் இல்லாத படங்கள்தான். ஆனாலும், ஹீரோவைத் தாண்டி நல்ல கதைகள் ஜெயிக்கும் காலம் இது.
Loading...
Loading...
Loading...