இனி சினிமா நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு கிடையாது - தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

சினிமா
Updated Jul 08, 2019 | 22:08 IST | Zoom

இனி அனைத்து சினிமா விழாக்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  |  Photo Credit: Twitter

காலம் காலமாக சினிமா துறையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு தயாரிப்பாளர்களின் வசதியைப் பொருத்து அன்பளிப்பு வழங்குவது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக பல அதிரடி முடிவுகள் தயாரிப்பாளர் சங்கமும் பி.ஆர்.ஓக்கள் யூனியனும் எடுத்துள்ளது. 

இது சம்பந்தமாக அவர்கள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிக்கையில், ‘’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவைதான்.

எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் அதாவது பட பூஜை, ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரெய்லர் விழா, என அனைத்து விழாக்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது, மேலும்   அனைவருக்கும் தேநீர், ஸ்நாக்ஸ் மட்டுமே வழங்கப்படும். முக்கிய விஷயமாக விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை, நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்களை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் தமிழ் சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பது இல்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு சார்பாகவும் தென்னிந்தியத் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 


 

NEXT STORY
இனி சினிமா நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு கிடையாது - தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை Description: இனி அனைத்து சினிமா விழாக்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...