'தி லயன் கிங்' படத்தின் பத்திரிகையாளர் சந்திபில் சித்தார்த், அரவிந்த் சுவாமி

சினிமா
Updated Jul 08, 2019 | 17:27 IST | Zoom

'தி லயன் கிங்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம்புலி பங்குபெற்று படத்தை பற்றிய தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

The Lion King
த லயன் கிங்   |  Photo Credit: Twitter

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள 'தி லயன் கிங்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ ஷங்கர், சிங்கம்புலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

1994-ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் புகழ் பெற்ற அனிமேஷன் படமான லயன் கிங் தற்போது லைவ் அக்ஷன் தொழிநுட்பத்தில் 'தி லயன் கிங்' என்ற பெயரில் வெளியாகுகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரவிசங்கர், ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, மனோபாலா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோஹிணி ஆகியோர் டப் செய்துள்ளனர். இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

 

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தை பற்றியும் தங்கள் அனுபவத்தை பற்றியும் பேசியுள்ளனர். 'தி லயன் கிங்' படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிம்பாவுக்கு டப் செய்துள்ள நடிகர் சித்தார்த் இந்த படத்தில் வேலை செய்ததை தான் மிகவும் ரசித்ததாகவும், இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டும் அல்ல அனைவருக்குமான படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை குறிக்கும் நல்ல கருத்தும் உள்ளடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

'ஸ்கார்' என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு டப் செய்துள்ள அரவிந்த் சுவாமி, அனிமேஷன் படத்திற்கு டப் செய்வது பிரத்யேக அனுபவம் என்றும், வழக்கமான ஹீரோ ரோல்கள் பண்ணி போர் அடித்து விட்டதாகவும், இது போன்ற புதிய முயற்சிகள்  தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1994-இல் வெளியான லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் அரவிந்த் சுவாமி சிம்பா கதாபாத்திரத்திற்கு டப் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு டப் செய்துள்ள சிங்கம்புலி லயன் கிங் படத்திற்கு டப் செய்தது புதுவித அனுபவம் என்றும் இப்படத்தில் பல அற்புதமான வசனங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். லயன் கிங்கின் காமெடி கதாபாத்திரமான பூம்பாவிற்கு டப் செய்துள்ள ரோபோ ஷங்கர் இப்படத்தின் சர்வதேச புகழை பற்றி தனக்கு தெரியாது எனவும், இந்த படத்தில் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.             

'ஐயன் மேன்', 'ஜங்கிள் புக்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஜான் ஃபாவ்ரியூ இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகெங்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'தி லயன் கிங்' திரைப்படம் ஜூலை 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது.  
                  

NEXT STORY
'தி லயன் கிங்' படத்தின் பத்திரிகையாளர் சந்திபில் சித்தார்த், அரவிந்த் சுவாமி Description: 'தி லயன் கிங்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம்புலி பங்குபெற்று படத்தை பற்றிய தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola