தமிழில் ‘பக்கிரி’யாக வெளிவருகிறது தனுஷின் ஹாலிவுட் திரைப்படம்!

சினிமா
Updated May 20, 2019 | 23:21 IST | Zoom

கடந்த 2018ம் ஆண்டு, மே 30ம் தேதியன்று ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரான இந்த திரைப்படம், கென் ஸ்காட் இயக்கத்தில் உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்பட்டது.

cinema, சினிமா
தனுஷ்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்த ஹாலிவுட் திரைப்படமான ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி பக்கீர்’ திரைப்படம் தமிழில் வெளியாக இருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு, மே 30ம் தேதியன்று ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரான இந்த திரைப்படம், கென் ஸ்காட் இயக்கத்தில் உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்பட்டது.

அமித் திரிவேதி பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். நிக்கோலஸ் எரேரா பின்னணி இசை அமைத்திருந்தார். சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட்டுருந்தது.

கடந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில், ’வாழ்க்கையைத் தேடி நானும் போனேன்’ என்கிற தமிழ் டைட்டிலுடன் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார் தனுஷ். ஆனாலும், படம் தமிழில் வெளியாவது தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்நிலையில் ஒரு வருட காலம் கழித்து, ஒய் நாட் எக்ஸ் என்னும் நிறுவனம், ‘பக்கிரி’ என்னும் தமிழ் டைட்டிலுடன் இந்த திரைப்படத்தை வருகிற ஜூன் 21ம் தேதி தமிழில் ரீலீஸ் செய்கிறது. இப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
தமிழில் ‘பக்கிரி’யாக வெளிவருகிறது தனுஷின் ஹாலிவுட் திரைப்படம்! Description: கடந்த 2018ம் ஆண்டு, மே 30ம் தேதியன்று ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரான இந்த திரைப்படம், கென் ஸ்காட் இயக்கத்தில் உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles