ஹேண்ட் பேக் 4 லட்சம், ட்ரஸ் 80 ஆயிரம், ஷூ 40 ஆயிரம் - ப்ரியங்காவின் சிம்பிள் லுக்!

சினிமா
Updated Jun 17, 2019 | 18:39 IST | Zoom

பணக்காரர்கள் சிம்பிளாக இருப்பதற்குதான் அதிகம் செலவு செய்வார்கள் என்பதற்கு ப்ரியங்கா சோப்ராவைத்தான் உதாரணமாகக் கூறவேண்டும் போல!

The cost of Priyanka Chopra's casual outing will surprise you
The cost of Priyanka Chopra's casual outing will surprise you  |  Photo Credit: Instagram

பாலிவுட் நடிகைகள் எங்கு சென்றாலும் வைரல் ஆவது இயல்பான ஒன்றுதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வைரல் ஆவார்கள். அப்படி சமீபமாக ப்ரியங்கா சோப்ரா அவரது விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களுக்கு வைரல் ஆகி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் பயன்படுத்திய சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹேண்ட் பேக் வைரல் ஆனது. தற்போது அவர் அணிந்திருந்த செம கேஷுவலான ஒரு ஆடையும் அவரது ஷூவும் வைரல் ஆகிவருகிறது. ஏன் தெரியுமா அதுவும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் தான். பெரிய திருமணங்களில் நம் ஊர் பட்டுபுடவையே ஒரு லட்ச ரூபாய்க்கு சாதரணமாக அணிவார்கள். ஆனால் இவர் அணிந்திருந்த உடை ரங்கநாதன் தெருவில் 800 ரூபாய்க்கு வாங்கும் உடை போல இருக்கிறது, இது போய் 90 ஆயிரமா என்பதே இந்த உடை வைரல் ஆனதற்குக் காரணம்...!

 

 

 

 

 

பிரபல அமேரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா, பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அவருடன் வசிக்கிறார். அங்கு இருக்கும்போது இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறுவார்கள். சமீபத்தில் இருவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வளம் வந்ததுகூட வைரல் ஆனது. அப்படி நேற்று ப்ரியங்கா சோப்ரா தனது கணவருடன் வெளியே வந்தபோது அணிந்திருந்த உடைதான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதன் பெயர் ட்ராஃபிக்-ஸ்டாப்பிங் ட்ரஸ். இதனை ஷர்ட் ட்ரஸ் என்றும் கூறுகிறார்கள். மேலே ஷர்ட் போல இருக்கும் இந்த ட்ரஸ், கீழே பாவாடை போல இருக்கிறது. இது அமேரிக்கன் பிராண்டான (Hellessy) ஹெல்லிஸியுடையது. இது நம் ஊருக்கு 83 ஆயிரம் ரூபாய். அதோடு அவரு பாம்பு தோல் டிசைன் (Alexandre Birman Kittie) கொண்ட ஒரு பூட் அணிந்திருந்தார். அதன் விலை 40 ஆயிரம் ரூபாய். 

அவர் தலையின் மேல் போட்டிருக்கும் கண்ணாடியின் விலை என்ன தெரியுமா? அதுவும் 40 ஆயிரம் ரூபாயாம்! இது Thierry Lasry Vigilanty பிராண்டைச் சேர்ந்தது. அவர் காலையில் அந்த பாம்பு பூட்ஸ் அணிந்துவிட்டு மதியம் மெல்லிசான ஒரு காலணியை அணிந்திருந்தார். Stuart Weitzman Nudist sandals பிராண்டைச் சேர்ந்த் இதன் விலை 28 ஆயிரம் ரூபாய். இவை அனைத்தையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் வருகிறது. பணக்காரர்கள் சிம்பிளாக இருப்பதற்குதான் அதிகம் செலவு செய்வார்கள் என்பதற்கு ப்ரியங்கா சோப்ராவைத்தான் உதாரணமாகக் கூறவேண்டும் போல!

கீழே இருக்கும் படம்தான் இரண்டு நாட்களுக்கு முன்னால் வைரல் ஆன சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹேண்ட் பேக் படம்! 

 

 

NEXT STORY
ஹேண்ட் பேக் 4 லட்சம், ட்ரஸ் 80 ஆயிரம், ஷூ 40 ஆயிரம் - ப்ரியங்காவின் சிம்பிள் லுக்! Description: பணக்காரர்கள் சிம்பிளாக இருப்பதற்குதான் அதிகம் செலவு செய்வார்கள் என்பதற்கு ப்ரியங்கா சோப்ராவைத்தான் உதாரணமாகக் கூறவேண்டும் போல!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles