டியூமரைக் கண்டுகொள்ளாமல் விட்ட நடிகை சனம் ஷெட்டி - உருக்கமான பதிவு

சினிமா
Updated Sep 30, 2019 | 16:31 IST | Zoom

தர்ஷனின் நெருங்கிய தோழியான நடிகை சனம் ஷெட்டி டியூமரால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன் இதை பற்றி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டிக்கு டியூமர்,Tharshan's gf Sanam shetty diagnosed with tumor;undergoes emergency surgery
நடிகை சனம் ஷெட்டிக்கு டியூமர்  |  Photo Credit: Instagram

பிக்பாஸ் தர்ஷனின் தோழி சனம் ஷெட்டி டியூமர் காரணமாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

நடிகை சனம் ஷெட்டி 'அம்புலி', 'வெள்ளையான இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்', 'கதம் கதம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் நெருங்கிய தோழியான இவர், அவரை ஒரு தலையாகக் காதலிப்பதாக பேட்டிகளில் கூறியிருந்தார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற பிறகு அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்.  பின்னர் தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவரை சென்று சந்தித்தார். அப்போது எடுத்த புகைப்படத்தோடு தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது நியாயமில்லை என்று சனம் ஷெட்டி தெரிவித்திருந்தார். 

 

 

இந்நிலையில் இன்று சனம் ஷெட்டி மருத்துவமனையில் தன் தாயாரோடு இருக்கும் புகைப்படத்தோடு "எனக்கு டியூமர் இருப்பது சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. ஆனால் அதனை அலட்சிய படுத்தியதால், அது தீவிரமாகி தற்போது அவசரமாக சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உடல்நிலை சம்பந்தபட்ட விஷயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள் என்று அறிவுறுத்தி, தான் விரைவில் குணமடைய பிரார்த்திக்க அதில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு உறுதுணையாக உள்ள தனது தாயாருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.      
 

 

இவரின் இந்த பதிவை தொடந்து பலரும் அவர் விரைவில் குணமடைய நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.  

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...