பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷனின் உருக்கமான பதிவு

சினிமா
Updated Sep 30, 2019 | 12:53 IST | Zoom

தர்ஷன் பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பிக்பாஸ் பற்றியும் ரசிகர்கள் பற்றியும் இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தர்ஷனின் உருக்கமான பதிவு,Tharshan emotional post after eviction from BiggBoss house
இன்ஸ்டாகிராமில் தர்ஷனின் உருக்கமான பதிவு  |  Photo Credit: Instagram

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 இந்த வாரம் முடிவடையும் நிலையில், அங்கு இருப்பவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நேற்று தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் மட்டும் அல்லாது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சீசன் டைட்டிலை தர்ஷன் தான் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் தானும் இதனை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். தர்ஷனின் ரசிகர்கள் அவர் வெளியேற்றப்பட்டதை தற்போது சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

இதனிடையே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தர்ஷன் முதல்முறையாக நிகழ்ச்சியை பற்றியும் ரசிகர்களை பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் ''நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது நல்ல உணர்வு. ஆனால் நாம் சந்திக்காத மனிதர்களிடம் அன்பு கிடைப்பது இருப்பதிலேயே சிறந்த உணர்வு. இன்று தான் என் வாழ்க்கையிலேயே சிறந்த நாள். நான் சந்தித்திராத மனிதர்களிடம் அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளதை நான் உணர்ந்துள்ளேன். எனக்கு கிடைத்ததிலேயே சிறந்த பரிசு இது தான். இதற்கு காரணமாக இருந்த பிக்பாஸ் 3-க்கு நன்றி. என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்து இந்த 98 நாட்கள் எனக்கு ஆதரவு தந்த உங்களுக்கு நன்றி கூற எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்த அன்பை என் மனதில் உணர்ந்துள்ளேன். நான் உங்களை விரைவில் சந்திக்கிறேன். தயவுசெய்து அதுவரை பொருத்துக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Love you all ❤️

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

 

தர்ஷன் வெளியேறியதை தொடர்ந்து தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் இந்த வார நடுவிலோ, அல்லது கடைசி தினத்தன்று காலையிலோ ஒருவர் வெளியேற்றப்படுவார். பின் இருக்கும் மூவரில் மேடைக்குச் செல்லும் முன் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார். இறுதியாக மேடையில் இருவர் மட்டுமே ஏறுவர். ஷெரின், சாண்டி, முகேன், லாஸ்லியாவில் யார், எந்த இடத்தைப் பிடிக்கிறார்கள் என்று இந்த வார இறுதியில் தெரியவரும். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...