தளபதி63 கதைத் திருட்டு விவகாரம், புகாரை ஏற்கமுடியாது என்று கூறிய எழுத்தாளர் சங்கம், காரணம் இதுதான்!

சினிமா
Updated Apr 16, 2019 | 09:41 IST | டைம்ஸ் நவ் தமிழ்

தளபதி63 தனது கதை என்று குறும்பட இயக்குநர் செல்வா தற்போது எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார்.

அட்லி தளபதி63
அட்லி   |  Photo Credit: Twitter

ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லீ. அதன்பிறகு அவர் எடுத்த தெறி, மெர்சல் இரண்டு படமுமே விஜய்யை வைத்துதான். தற்போதும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து தளபதி63 - ஆக உருவாகி வரும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தில், பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராஃப், பரியேறும் பெருமாள் கதிர், நடிகை இந்துஜா, நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஸ்போர்ட்ஸ் மூவி எனவும், விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் எனவும் தகவகள் வெளியாகின. எப்போதும் அட்லீ படம் ஏதோவொரு ஹிட் படத்தின் தழுவலாக இருக்கும் என்று படம் வந்தபிறகு விமர்சனங்கள் எழும். ராஜா ராணி படம் மௌனராகம் போலவும், தெறி சத்ரியன் படம் போலவும், மெர்சல் மூன்று முகம் போலவும் இருக்கிறதென்று படம் வெளியாகபோது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்தப்படத்துக்கு தற்போதே விமர்சனத்தில் சிக்கியுள்ளார் அட்லீ.

வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் இந்தப்படத்தை தனது கதை என்று குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா தற்போது எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார்.  இது குறித்து நியூஸ் 18-க்கு பேசியிருக்கும் கே.பி.செல்வா இந்தக்கதையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்திடம் கூறியதாகத் தெரிவிக்கிறார். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகியபோது எழுத்தாளர் சங்கத்தை அணுகுமாறு நீதிமன்றம் தெரிவித்ததால் தற்போது தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்திடம் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 

அட்லி கதைத்திருட்டு

இந்தப் புகார் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம், கே.பி.செல்வா, சங்கத்தில் தற்காலிக உறுப்பினராகத்தான் இருக்கிறார் என்றும், சங்க விதிமுறைகளின்படி அவரால் சங்க உறுப்பினராக இருக்கும் அட்லி மீது புகார் அளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.  இதனால் கே.பி.செல்வா மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதாகத் தெரிவித்திருக்கிறார். 

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய  சர்கார் படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து கே.பாக்கியராஜ் பதிவியில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கடந்த டிசம்பரில் மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 
 

NEXT STORY
தளபதி63 கதைத் திருட்டு விவகாரம், புகாரை ஏற்கமுடியாது என்று கூறிய எழுத்தாளர் சங்கம், காரணம் இதுதான்! Description: தளபதி63 தனது கதை என்று குறும்பட இயக்குநர் செல்வா தற்போது எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார்.
Loading...
Loading...
Loading...