"பிகில்" டிரெய்லா் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

சினிமா
Updated Oct 07, 2019 | 19:07 IST

பிகில் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பை விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே #bigiltrailer என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனா். 

Bigil trailer will be launched on October 12
பிகில் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு   |  Photo Credit: Twitter

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். நயன்தாரா, விவேக், யோகிபாபு, ஆனந்தராஜ், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உள்பட பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க திரைக்கு வருகிறது.

பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அக்டோபர் 12- ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

 

பிகில் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பை விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே #bigiltrailer என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனா். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...