21ம் தேதி தளபதி 63 ‘பர்ஸ்ட் லுக்’-வெளியானது விஜய் படத்தின் அப்டேட்!

சினிமா
Updated Jun 19, 2019 | 19:15 IST | Zoom

’பரியேறும் பெருமாள்’ கதிர் விஜயின் தோழராக நடிக்கிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது.

cinema, சினிமா
தளபதி 63 அப்டேட்  |  Photo Credit: Twitter

சென்னை: இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்ற பெயரிடப்படாத திரைப்படமான தளபதி 63 அப்டேட் இன்று வெளியான நிலையில், புகைப்படமோ, டீசரோ வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நடித்து வருகின்ற திரைப்படம். இதைத்தவிர இதுவரையில் இப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

 

 

’பரியேறும் பெருமாள்’ கதிர் விஜயின் தோழராக நடிக்கிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. இந்நிலையில் ரசிகர்களோ தளபதி 63 அறிவிப்பு இன்று வரும், நாளை வரும் என்று வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை தளபதி 63 அப்டேட் ஒன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் ஒருவேளை டீசரா, புதிய புகைப்படமா, பர்ஸ்ட் லுக்கா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் பர்ஸ்ட் லுக் 21ம் தேதி மாலை 6 மணிக்கும், செகண்ட் லுக் 22ம் தேதியன்று இரவு 12 மணிக்கும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘21ம் தேதி மாலை 5.59 வரைதான் இது தளபதி 63’ என்று தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் டைட்டிலும் வெளியாகிவிடும் என்பதால் அவர் அப்படி தெரிவித்துள்ளார். 

எனினும், அப்டேட்டுக்கே அப்டேட்தானா என்று ரசிகர்கள் சிறிது வருத்தமடைந்துள்ளனர். எனினும், வெள்ளியன்று பர்ஸ்ட் லுக் வருவதால் ரசிகர்களிடையே மகிழ்ச்சி கலந்த எதிர்ப்பார்ப்பும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
21ம் தேதி தளபதி 63 ‘பர்ஸ்ட் லுக்’-வெளியானது விஜய் படத்தின் அப்டேட்! Description: ’பரியேறும் பெருமாள்’ கதிர் விஜயின் தோழராக நடிக்கிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles