சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் - தயாராகிறது தலைவர் 168!

சினிமா
Updated Oct 11, 2019 | 12:12 IST | Zoom

சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவிருப்பது சினிமா துறையில் நிச்சயமாக ப்ரேக்கிங் செய்திதான்

தலைவர் 168
தலைவர் 168  |  Photo Credit: Twitter

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் பட ஷூட்டிங்கில் ரஜினி சம்பந்தப்பட்ட படபிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் மும்பையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் தனது வீட்டில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து நண்பர்களை வரவேற்று மகிழ்ந்தார். சற்று ஓய்வில் இருந்தவர் அடுத்த படம்தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை எடுக்கவிருப்பது சிறுத்தை சிவா என்றும் பேச்சு அடிபட்டது. 

இந்நிலையில் அந்த செய்தியை உண்மையாக்கி இருக்கிறது சன் டிவியின் ட்வீட். ஆம் அடுத்த சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கவிருப்பது சிறுத்தை சிவாதானாம்! கடைசியாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி இருந்தார் சிவா. ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியான இந்தப்படம் பேட்டயைவிட அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

 

 

இந்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க இருக்கும் படத்தை தாங்கள்தான் தயாரிக்கவிருப்பதாக ட்வீட் செய்திருக்கிறது. ஒருபக்கம் ரஜினி அரசியலுக்கு வருவது விருப்பம் இல்லாத ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில் அவர் அப்படி என்றால் அரசியலுக்கு வருவது தள்ளிப் போகுமே என வருத்தத்திலும் உள்ளார்கள். எது எப்படியோ சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவிருப்பது சினிமா துறையில் நிச்சயமாக ப்ரேக்கிங் செய்திதான்!
 

NEXT STORY