தல60 படத்தின் டைட்டில் 'வலிமை' ; படப்பிடிப்பு இன்று துவங்கியது!

சினிமா
Updated Oct 18, 2019 | 18:46 IST | Zoom

’தல60’ படத்துக்கு வலிமை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Thala60 titled as Valimai, pooja held today
Thala60 titled as Valimai, pooja held today   |  Photo Credit: Twitter

’தல60’ படத்துக்கு வலிமை என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளது. மேலும் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு தல 60 என தலைப்பிட்டிருந்தது படக்குழு.

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.  'ஆரம்பம்' படத்திற்கு பிறகு நேர்கொண்ட பார்வை படத்துக்கு இசையமத்த யுவன் சங்கர் ராஜா, இந்தப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைகிறார். 

 

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. மேலும் படத்தில் கார் சேஸ், பைக் சேஸ் என பல அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறவுள்ளது. மேலும் இந்தப்படத்தின் கதாநாயகி, மற்ற படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்த அஜித் தற்போது 'வலிமை' படத்தில் புது கெட்டப்பில் நடிக்கவுள்ளார். முறுக்கு மீசையுடன் இவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக 'என்னை அறிந்தால்' படத்தில் போலீசாக நடித்த அஜித் தற்போது மீண்டும் காவலர் உடையை அணியவுள்ளார்!

NEXT STORY