HBDVijayDeverakonda - ஹேப்பி பர்த்டே டியர் காம்ரேட்!

சினிமா
Updated May 09, 2019 | 12:47 IST | விபீஷிகா

25 வயதில் வங்கிக்கணக்கில் 500 ரூபாய் இல்லாமல் இருந்தவர், தற்போது ஃபோர்ப்ஸ் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில்!

Vijay Deverakonda birthday today
Vijay Deverakonda birthday today  |  Photo Credit: Twitter

ஒரே நாளில் உலக ஃபேமஸ் என்று சொல்வார்களே அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ கண்டிப்பாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்குப் பொருந்தும். தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் தேவராகொண்டாவின் சினிவா டைம்லைன் ஒரு சின்ன ரீகேப்!

2011-ஆம் ஆண்டு நுவில்லா திரைப்படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய். அதன்பிறகு சில படங்களில் துணை நடிகர், சிறப்புத்தோற்றம் என்று நடித்த அவருக்கு ஒரு பென்ச் மார்க்காக வந்த படம் பெல்லி சொப்புலு. இந்தத் திரைப்படம் ஹிட் அடித்து அவரை உலகுக்குக் காட்டியது மட்டுமல்லாமல் சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்கு இரண்டு தேசிய விருதுகளையும் அள்ளியது. 

அதன்பிறகு 2017-இல் வந்த அர்ஜுன் ரெட்டி பற்றி நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அந்தப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்ததை விடுங்கள். விஜய் தேவரகொண்டாவைத் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் பெண்களின் ரொமாண்டிக் ஹீரோவாக்கியதும் இந்தப்படம்தான். இன்றும் பல பேரின் போன் வால்பேப்பராக சிரிக்கிறார் விஜய். தற்போது அந்தத்திரைப்படம் தமிழில் ஆதித்யா வர்மாவாகவும், ஹிந்தியில் கபீர் சிங்காகவும் தயாராகிக் கொண்டு இருக்கிறது. 

’’நேற்று இரவு தனது நன்பர்களுடன் கேக் வெட்டித் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா’’

 

 

அதன்பிறகு வந்த கீத கோவிந்தமும் ஹிட். ரௌடிபேபிக்கு முன்னால் வரை அந்தப்படத்தில் இடம்பெற்ற இன்கெம் இன்கேம் பாடல்  டிக்டாக் வைரல். பாலிவுட் பிரபலங்களே காஃபி வித் கரன் ஷோவில் விஜயைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விஜய்யுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 7 படங்களில் சூப்பர்ஸ்டாராகி இருக்கிறார் விஜய். தனது கேரியரைப் பற்றி அவரே போட்ட ட்வீட் தான் இது! 

 

 

தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவராக அவர் நடித்திருக்கும் டியர் காம்ரேட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது. வரும் ஜூலை 26-ஆம் தேதி அன்று இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. 25 வயதில் வங்கிக்கணக்கில் 500 ரூபாய் இல்லாமல் இருந்தவர், தற்போது ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் 30 வயதுக்குள் பிரபலமானவர்களின் பட்டியல் இடம்பிடித்ததற்கு அதிர்ஷம் காரணமல்ல, கடின உழைப்பு!

ஹேப்பி பர்த்டே டியர் காம்ரேட்!

NEXT STORY
HBDVijayDeverakonda - ஹேப்பி பர்த்டே டியர் காம்ரேட்! Description: 25 வயதில் வங்கிக்கணக்கில் 500 ரூபாய் இல்லாமல் இருந்தவர், தற்போது ஃபோர்ப்ஸ் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில்!
Loading...
Loading...
Loading...