தெலுங்கு சினிமா குழந்தை நட்சத்திரம் டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!

சினிமா
Updated Oct 19, 2019 | 19:57 IST | Zoom

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை நட்சத்திரம் திடீரென மரணம் அடைந்ததது ஆந்திர திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Telugu junior Artist gokul sai krishna
தெலுங்கு சினிமா குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா  |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் கலக்க வந்த குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கோகுல் சாய் கிருஷ்ணா. தெலுங்கு நடிகா் நந்தமுாி பாலகிருஷ்ணாவை போல் நடித்து காட்டி ஆந்திரா முழுவதும் பிரபலமானாா். எனவே அவரை ஜூனியா் பாலகிருஷ்ணா என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினா்.ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிராமா ஜூனியர்ஸ் நிகழ்ச்சியிலும் கலக்கி வந்தாா்.

இந்தநிலையில் கோகுல் சாய் கிருஷ்ணாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மதனபள்ளியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து உயர் சிகிச்சைக்காக பெங்களூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா்.

ஆனால், வழியிலேயே கோகுல் மரணம் அடைந்துவிட்டான். இந்த செய்தி கேள்விபட்டு தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. கோகுல் மரணத்துக்கு  நடிகா் நந்தமுரி பாலகிருஷ்ணா இரங்கல் தெரிவித்துள்ளாா். 

NEXT STORY