நடிகை சுரேகா வாணி கணவா் உடல்நலக்குறைவால் காலமானாா்

சினிமா
Updated May 07, 2019 | 12:57 IST | Zoom

சுரேஷ் தேஜா, தெலுங்கில் மா டாக்கீஸ், ஹார்ட்பீட், மொகுட்ஸ் பெல்லம்ஸ் உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.

Telugu actress Surekha Vani and Suresh Teja,சுரேஷ் தேஜா மற்றும் நடிகை சுரேகா வாணி
சுரேஷ் தேஜா மற்றும் நடிகை சுரேகா வாணி  |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: தெலுங்கு நடிகை சுரேகா வாணியின் கணவரும் பிரபல சின்னத்திரை இயக்குநருமான சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானாா்.

தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவா் சுரேக்கா வாணி. தமிழில் விஜய்யின் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம், தனுஷின் உத்தமபுத்திரன், தெய்வ திருமகள், எதிர் நீச்சல், ஜில்லா, உதயம் NH4 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா்.

தொடர்ந்து தெலுங்கில் துபாய் சீனு, ஸ்ரீமந்தடு, நில டிக்கெட் போன்ற படங்களிலும் நடித்துள்ளாா்  தெலுங்கு திரையுலகில் பிரபலமான சுரேஷ் தேஜாவை காதலித்து திருணம் செய்து கொண்டாா். சுரேஷ் தேஜா, தெலுங்கில் மா டாக்கீஸ், ஹார்ட்பீட், மொகுட்ஸ் பெல்லம்ஸ் உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுரேஷ் தேஜா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். சுரேஷின் மரண செய்தி திரைத் துறையைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சுரேஷ் தேஜாவின் இழப்பால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகமடைந்துள்ளனர்.

NEXT STORY
நடிகை சுரேகா வாணி கணவா் உடல்நலக்குறைவால் காலமானாா் Description: சுரேஷ் தேஜா, தெலுங்கில் மா டாக்கீஸ், ஹார்ட்பீட், மொகுட்ஸ் பெல்லம்ஸ் உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles