’காதல் சுகமானது’ படத்தில் தோன்றிய தெலுங்கு நடிகர் வேணு மாதவ் காலமானார்

சினிமா
Updated Sep 25, 2019 | 15:06 IST | Zoom

என்னவளே (2000), காதல் சுகமானது (2003) ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள வேணு மாதவ் உடல் நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

Venu Madhav, வேணு மாதவ்
வேணு மாதவ்  |  Photo Credit: Instagram

தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார். 39 வயதான இவர் 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சிகந்தராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12:20 மணிக்கு காலமானார்.

தெலுங்கு திரையுலக மக்கள் தொடர்பாளர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டார். இதனையடுத்து தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

2016-ல் தயாரிக்கப்பட்ட டாக்டர் பரமானந்தா ஸ்டூடெண்ட்ஸ் எனும் திரைப்படத்தில் இறுதியாக நடித்த வேணு மாதவ், என்னவளே (2000), காதல் சுகமானது (2003) ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். உடல் நலம் குன்றியதால் கடந்த சில ஆண்டுகளாக வேணு மாதவ் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

 

அரசியலிலும் வேணு மாதவ் தலைகாட்டினார். சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு பிரச்சாரம் செய்தார் வேணு மாதவ்.

NEXT STORY