இயக்குநர் சங்கத் தேர்தல்: ஆர்.கே.செல்வமணி தலைவராகத் தேர்வு

சினிமா
Updated Jul 21, 2019 | 18:35 IST | Zoom

இன்று நடைபெற்ற இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்..கே செல்வமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மனைவி ரோஜாவுடன் ஆர்.கே.செல்வமணி
மனைவி ரோஜாவுடன் ஆர்.கே.செல்வமணி  |  Photo Credit: Twitter

கடந்த மாதம் நடைபெற்ற இயக்குனர் சங்க குழு கூட்டத்தில் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக இயக்குனர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு அமைத்த  குழுவின் சார்பில் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால் அமீர் தரப்பிலிருந்தும் பலரிடம் இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தலைவராக இருப்பது குறித்து பாரதிராஜா மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.

 இயக்குனர் சங்க தலைவர் பொறுப்பில் அவர் இருந்ததால் அந்தப் பொறுப்பு அல்லாமல் துணை தலைவர் பொறுப்பு போன்ற பதவிக்கு இன்று தேர்தல் நடத்துவதாக இருந்தது. ஆனால் பாரதிராஜாவே ஒரு மாதம் கழித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தேர்தலில் போட்டியிடாமல் தலைவனாவது சரியில்லை என்று கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 அதன் பிறகு அமீர், வெற்றிமாறன், கரு பழனியப்பன், போன்றவர்கள் ஒரு கூட்டணியாக தேர்தலில் நின்றனர், ஆனால் தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிட்ட போது அவரது மனுவை ஏற்க மறுத்ததால் அனைவரும் கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்து தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர்.

 அதன் பிறகு தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணியும்,  வித்யாசாகரும் போட்டியிட்டனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் வெளியானது. இதில் ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு முன்னால்  இயக்குநர் விக்ரமன் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  துணை தலைவர் பதவிக்கு கே.எஸ். ரவிக்குமாரும், ரவிமரியா போட்டியிட்டனர். ஏற்கனவே சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர். வி உதயகுமாரும் பொருளாளர் பதவிக்கு பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...