தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

சினிமா
Updated Aug 13, 2019 | 11:03 IST | Zoom

புகழ்பெற்ற பன்னாட்டு திரைப்பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Delhi High Court orders to take down Tamil Rockers
டெல்லி உயர்நீதிமன்றம் தமிழ்ராக்கர்ஸ் இணைதளத்தை முடக்க உத்தரவிட்டுள்ளது  |  Photo Credit: Twitter

புது டெல்லி: சட்டவிரோதமாக புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகழ்பெற்ற பன்னாட்டு திரைப்பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ ராக்கர்ஸ் உட்பட இ.ஜெட் டிவி., கேட் மூவிஸ், லைம் டாரெண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் தங்கள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை சட்டத்திற்குப் புறம்பான முறையில் இணையத்தில் வெளியிடுவதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது,

மேலும், ஸ்டார், யூடிவி, யுனிவர்சல் பிக்சர்ஸ், நெட்பிளிக்ஸ், பாரமௌண்ட் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் படைப்புகளும் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதால் பொழுதுபோக்குத்துறை நிறுவனங்கள் பெறும் நஷ்டத்தை சந்திப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, இது போன்ற சட்டவிரோத இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

திங்கட்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் நருலா முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மீது அந்நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளதால் சட்ட விரோதமாக அவற்றை இணையத்தில் வெளியிட தடை விதித்தார். 

நீதிமன்றம் இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை உள்ளதால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களின் முகவரிகள் மற்றும் பகிர்வுகளை முடக்க முடியுமா என இணைய சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மேற்கண்ட இணையதளங்களின் டொமைன்களை முடக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். 

NEXT STORY
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Description: புகழ்பெற்ற பன்னாட்டு திரைப்பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...