தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பு... வெளியானது 'சைரா நரசிம்மா ரெட்டி' ட்ரெய்லர்!

சினிமா
Updated Sep 18, 2019 | 20:10 IST | Zoom

சண்டை காட்சிகள், வசனங்கள், கலை இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது 'சைரா நரசிம்மா ரெட்டி' ட்ரெய்லர்.

வெளியானது 'சைரா நரசிம்மா ரெட்டி' ட்ரெய்லர், 'Sye Raa Narasimha Reddy' Trailer Released
வெளியானது 'சைரா நரசிம்மா ரெட்டி' ட்ரெய்லர்  |  Photo Credit: YouTube

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் படம்  'சைரா நரசிம்மா ரெட்டி'. இப்படத்தில் சிரஞ்சீவி நரசிம்மா ரெட்டியாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

சிரஞ்சீவியின் 151-வது படமாக உருவாகியுள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

 

பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு மிகவும் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளத்து 'சைரா நரசிம்மா ரெட்டி'. சண்டை காட்சிகள், வசனங்கள், கலை இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்திலும் மிரட்டுகிறது இப்படத்தின் ட்ரெய்லர்.      

'பாகுபலி', '2.0', 'கே.ஜி.எஃப்' என பல தென்னிந்திய படங்கள் தொடர்ந்து இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துவருகிறது. அந்த வகையில் 'சைரா நரசிம்மா ரெட்டி' படமும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த பொருட்ச்செலவில் உருவாகியுள்ள இப்படம் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகுகிறது.    

NEXT STORY