'அடிடா அவள’ என்று பெண்களைத் திட்டும் காட்சிகள் வைத்தது தவறுதான் - மன்னிப்பு கேட்ட செல்வா!

சினிமா
Updated May 15, 2019 | 23:25 IST | Zoom

செல்வராகவன் முதன்முறையாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘என்.ஜி.கே’.நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம் இது. இந்த திரைப்படம் மே 31ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

cinema, சினிமா
இயக்குனர் செல்வராகவன்  |  Photo Credit: Twitter

சென்னை: சூப் சாங்க் கலாச்சாரத்தைப் பின்பற்றி பெண்களைத் திட்டுவது போன்ற காட்சி வைத்ததற்காக மனம் திறந்து மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய தரமான படைப்புகளைத் தரக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இளைஞர்களிடம் இவருடைய படங்களுக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். 

இந்நிலையில், செல்வராகவன் முதன்முறையாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘என்.ஜி.கே’.நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம் இது. இந்த திரைப்படம் மே 31ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

என்.ஜி.கே திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக பேசிய செல்வராகவனிடம் ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் பெண்களை திட்டுவது போன்ற காட்சிகளையும், ‘அடிடா அவள’ என்ற பாடலையும் வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அக்கேள்விக்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக அந்த காட்சிகளும், வரிகளும் தவறுதான். அப்படிபட்ட காட்சியை எடுத்திருக்க கூடாது.  அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். செல்வராகவனின் மனம் திறந்த இந்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

NEXT STORY