இன்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியீடு - பிங்க் படத்தின் ட்ரைலரைப் பார்த்திருக்கீங்களா?

சினிமா
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 12, 2019 | 15:13 IST

ட்ரைலர் ரிலீஸாவதை முன்னிட்டு அஜித் கோர்ட் பின்னணியில் நிற்கும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

NerKonda Paarvai Trailer release today
NerKonda Paarvai Trailer release today  |  Photo Credit: Twitter

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்தப்படம் பிங்க். இதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மூன்று பெண்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தில் தல அஜித் நடித்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படம் நேர்கொண்ட பார்வை. 

இந்தப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கனேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று இயக்குநர் ஹச்.வினோத் இயக்குகிறார். 

 

 

படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது ரிலீஸாவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற மார்ச் மாதம் ரிலீஸானது. படத்தின் அறிவிப்புகள் எந்தவிதமான முன்னறிவிப்போ, ஆடம்பரமோ இல்லாமல் சர்ப்ரைஸாகத்தான் ரிலீஸாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகவிருக்கிறது என்று  டன் சேனல் அறிவித்திருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். ட்ரைலர் ரிலீஸாவதை முன்னிட்டு அஜித் கோர்ட் பின்னணியில் நிற்கும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வையிம் ஒரிஜினல் படமான பிங்க் படத்தின் ட்ரைலர் இங்கே...
 

 

 

NEXT STORY