ஜோதான் என்னோட ஜாக்பாட் - மனைவியை சிலாகித்த சூர்யா, கண்கலங்கிய ஜோ!

சினிமா
Updated Jul 27, 2019 | 17:27 IST | Zoom

இன்று நடைபெற்ற ஜாக்பாட் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தனது மனைவியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன் என்று சூர்யா ஜோதிகாவைப் பற்றிக் கூறினார்.

ஜோதிகாவுடன் சூர்யா
ஜோதிகாவுடன் சூர்யா  |  Photo Credit: Twitter

இன்று ஜோதிகா, ரேவதி நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜோதிகா பற்றிப் பேசிய நடிகர் சூர்யா, ‘’ ஜோதான் என்னுடைய ஜாக்பாட். கல்யாணம் ஆனபிறகு இங்கிருக்கும் பெண்கள் பற்றி அவங்களுக்கு இருக்கும் அக்கறை, விழிப்புணர்வு, ஈடுபாடு எனக்கே இந்த அளவுக்கு கிடையாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு விதமான பெண்களைப் பற்றியும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். அதனால்தான் நடிக்காமல் இருந்துவிட்டு 8 வருடங்கள் கழித்து வந்ததும் அவர் தேர்தெடுக்கும் படங்கள் வேறுவிதமாக உள்ளன.

மேலும் இந்தப் படம் பார்த்துவிட்டு ஜோதிகா செய்த சிலம்பமும் ரோப் ஷாட்டையும் பார்த்து எப்படி ஜோவால் இதெல்லாம் பண்ண முடிந்தது என்று எனக்கு அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது. தினமும் காலையில் 6 மணிக்கு குழந்தைகளை எழுப்பிப் பள்ளிக்கு கிளப்ப வேண்டும் என்பதால் 5 - 6 உக்கார்ந்து அன்றைய ஷூட்டிங் டயலாக்குகளைப் படிப்பார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதும் தினமும் 2 மணிநேரம் சிலம்பம், 2 மணிநேரம் டான்ஸ் ரிகர்சல் மீண்டும் குழந்தைகள் வந்தவுடன் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என உழைத்திருக்கிறார் ஜோ. அவரைப்பார்த்து நானும் சுதா படத்துக்கு வசனங்களை வீட்டிலேயே படிக்கத் தொடங்கியுள்ளேன். அவரைப் பார்த்து எப்படி இன்னும் எனது தொழிலை சிறப்பாகச் செய்யவேண்டும் என கற்றுக் கொள்கிறேன் என்று தனது மனைவியைப் பெருமை பொங்கக் கூறினார் சூர்யா. இதனைக் கேட்ட ஜோதிகா சற்று கண்கலங்கினாலும் சந்தோஷத்தில் சூர்யாவையே பாத்துக் கொண்டிருந்தார். மேட் ஃபார் ஈச் அதர் என்றால் சும்மாவா! 

பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி நடித்து வெளியான ‘குலேபகாவலி’ படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ள திரைப்படம் ஜாக்பாட். இந்த திரைப்படத்தினை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. ஹீரோயின் சப்ஜெக்டான இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், ஜெகன், யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும்  ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...