வெளியானது காப்பான் பட ட்ரைலர்! - வீடியோ

சினிமா
Updated Sep 04, 2019 | 19:46 IST | Zoom

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த காப்பான் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் ரிலீஸானது

காப்பான் ட்ரைலர்
Kaappaan Trailer   |  Photo Credit: YouTube

நடிகர் சூர்யா மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது, ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி அனைத்தும் ஹிட் அடித்த நிலையில் தற்போது ட்ரைலர் ரிலீஸாகி உள்ளது.  அவரது என்ஜிகே படத்தை தொடர்ந்து வெளிவர இருக்கின்ற திரைப்படம் காப்பான். 

’அயன்’, ‘மாற்றான்’ திரைப்படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. ’காப்பான்’ என்றால் காப்பவன், காவலன் என்று பொருள் படுகிற வகையில் படத்திற்கு தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரதமராக மோகன்லால் நடித்துள்ளார், அவரது பாதுகாவலராக சூர்யா நடித்துள்ளார். அதனாலேயே இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

லைக்கா நிறுவனத் தயாரிப்பில் சூர்யாவின் 37வது திரைப்படமான காப்பானில் அவருடன் இணைந்து மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, சாயீஷா, பொமன் இரானி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா மோகன்லாலில் மகனாகவும் சயீஷா மோகன்லாலில் உதவியாளராகவும் நடித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப்படம் இந்த மாதம் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது, 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...