சூர்யாவின் 'காப்பான்' படம் எப்படி இருக்கு ? - ட்விட்டர் ரெஸ்பான்ஸ் இதோ!

சினிமா
Updated Sep 20, 2019 | 16:34 IST | Zoom

இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'காப்பான்' திரைப்படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்கள் இதோ!

'காப்பான்' ட்விட்டர் ரெஸ்பான்ஸ்,,Suriya's 'Kaappaan' movie Twitter response
'காப்பான்' ட்விட்டர் ரெஸ்பான்ஸ்,  |  Photo Credit: Twitter

நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள 'காப்பான்' படம் இன்று வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பூமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் மோகன் லால் இப்படத்தில் இந்திய பிரதமராக நடித்துள்ளார். சூர்யா பிரதமரைப் பாதுகாக்கும் எஸ்.பி.ஜி (Special Protection Group) வீரராக  நடித்துள்ளார். சூர்யாவின் கடந்த சில படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், அவரின் ரசிகர்கள் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்தவர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


'காப்பான்' படத்தை பார்த்தவர்கள் வழக்கம்போல் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் காதல் காட்சிகள், பாடல்கள் படத்திற்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல், விவசாயம் பற்றிய கருத்துக்கள் கதையின் ஓட்டத்திற்கு குறுக்கிடும் வகையில் அமைந்துள்ளது.       
 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...